அருட் ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கியொளி ஈத்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியாவாறு எனக்கருளும் தெய்வம் தெருட் பாடல் உவந்தெனையுஞ் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்
அம்பலத்தரசே அருமருந்தே
ஆனந்தத்தேனே அருள்விருந்தே
பொதுநடத்தரசே புண்ணியனே
புலவரெலாம் புகழ் கண்ணியனே
மலைதரு மகளே மட மயிலே
மதிமுக அமுதே இளங்குயிலே
ஆனந்தக் கொடியே இளம்பிடியே
அற்புதத்தேனே மலைமானே
சிவ சிவ சிவ சிவ சின்மய தேஜா
சிவ சுந்தர குஞ்சித நடராஜா
படனவிவேகா பரம்பர வேதா
நடன சபேசா சிதம்பர நாதா
அரிபிரிமாதியார் தேடிய நாதா அரகர சிவ சிவ ஆடிய பாதா
நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே
நல்ல தெலாஞ செய வல்லவனே
என்னுயிர் உடம்போடு சித்தமுதே
இனிப்பது நடராஜ புத்தமுதே
நடராஜா வள்ளலை நாடுதலே நம் தொழிலாம் விளையாடுதலே அம்பலவாணர் தம் அடியவரே
அருள் அரசாள் மணி முடியவரே
அருட் பெரும் ஜோதியைக் கண்டோமே
ஆனந்தக் தெள்ளமு துண்டோமே.