02. மங்களத்து நாயகனே - Mangalathu Nayagane Lyrics

P Madhav Kumar
0 minute read

 மங்களத்து நாயகனே

மன்னாளும் முதலிறைவா 
பொங்குதன வயிற்றோனே
பொற்புடைய ரத்தினனே 
சங்கரனார் தருமதலாய்
சங்கடத்தைச் சம்கரிக்கும் 
எங்கள் குழவிடிவிளக்கே
எழில்மனியெ கணபதியே!


அப்பமுடன் பொரிகடலை
அவலுடனே அருங்கதலி 
ஒப்பில்லா மோதகமும்
ஒருமனதாய் ஒப்புவித்து 
எப்பொழுதும் வணங்கிடவே
எமையாள வேண்டுமென 
அப்பன் அவன் மடி அமரும்
அருட்கனியே கணபதியே!


பிள்ளையாரின் குட்டுடனே
பிழைநீக்கி உக்கியிட்டு 
எள்ளளவும் சலியாத
எம்மனத்தை உமக்காக்கித் 
தெள்ளியனாய்த் தெளிவதற்குத்
தேன் தமிழில் போற்றுகின்றேன் 
உள்ளியதை உள்ளபடி
உகந்தளிபாய் கணபதியே!

இன்றெடுத்த இப்பணியும்
இனித்தொடரும் எப்பணியும் 
நன்மணியே சண்முகனார்
தன்னுடனே நீ எழுந்து 
என்பணியை உன்பணியாய்
எடுத்தாண்டு எமைகாக்க 
பொன் வயிற்றுக் கணபதியே
போற்றியெனப் போற்றுகின்றேன்!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat