21. அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா பாடல்வரிகள்- Arul Manakkum Andavane Ayyappa

P Madhav Kumar
0 minute read

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா

ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா

இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா

இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா
ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா


உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா
ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா

உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா
ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா

என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா
ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா




ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா
ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா

ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா
ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா


ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா
ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா

ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா
செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா

அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா...
அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா
ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா...


ஐயப்பா..சுவாமி.. ஐயப்பா..சுவாமி..
ஐயப்பா..சுவாமி..ஐயப்பா

ஐயப்பா..சுவாமி..ஐயப்பா.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat