30. உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே - Ullathil Unnai

P Madhav Kumar
0 minute read

 உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே

சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்
உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்
அருளை அள்ளி அள்ளி தந்து காக்கவே
மலைமேல் அமர்ந்திருக்கும் இறைவா
ஐயப்பா ஸ்ரீசிவஹரி பாலா

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்


பந்தளத்தின் மன்னனே பார்புகழ்நாதனே
எந்தன் மனம் வாழ்த்திப்பாடும் தேனமுதே
கைகுவித்து வணங்கிட மெய்குளிரச் செய்பவனே
தைமகரஜோதியான ஆண்டவனே
சத்தியத்தின் நாயகன் புத்திரத்துப்பிறந்ததை
வண்ணமலர் சோலையாம் வையகமும் வாழ்த்துதே
ஐயா சரணம் ஆண்டருள் என திருவடி பணிந்தேன்

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்


விண்ணகத்தின் நிறங்களே உந்தன் நிறமாகும்
மண்ணகத்தின் மைந்தனே மாமணியே
என்னகத்தில் உண்மையாய் இருந்திடும் இறையுணர்வே
எண்ணங்களில் கருப்பொருளாய் வாழ்பவனே
சன்னதி வணங்கினேன் சந்ததி வாழ்ந்திட
கரணையின் காட்சியே அடியவர் மாட்சியே
ஐயா சரணம் ஆண்டருள் எனசேவடி தொழுதேன்
 
உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்
உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்
அருளை அள்ளி அள்ளி தந்து காக்கவே
மலைமேல் அமர்ந்திருக்கும் இறைவா
ஐயப்பா ஸ்ரீசிவஹரி பாலா

உள்ளத்தில் உன்னையே தெய்வமாய் எண்ணியே
சன்னிதானம் நாடியே சரணடைந்தேன்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat