07. ஆறுமுகம் ஆறுமுகம் - Arumugam Arumugam - Thiruppugazh 114
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

07. ஆறுமுகம் ஆறுமுகம் - Arumugam Arumugam - Thiruppugazh 114

P Madhav Kumar

 

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்

ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி


ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி

யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்


ஏறுமயில் வாகன குகா சரவணாஎனது

ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

ஏறுமயில் வாகன குகா சரவணாஎனது

ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்


ஏழைகள் வியாகுலமிதேதென வினாவிலுனை

யேவர் புகழ் வார்மறையு ...... மென் சொலாதோ

ஏழைகள் வியாகுலமி தேதென வினாவிலுனை

யேவர் புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ


நீறுபடு மாழை பொரு மேனியவ வேல அணி

நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே

நீறுபடு மாழை பொரு மேனியவ வேல அணி

நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே


நீசர் கடமோடெனது தீவினையெலாமடிய

நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா

நீசர் கடமோடெனது தீவினையெலாமடிய

நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா


சீறி வருமாறவுண னாவியுணு மானைமுக

தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்

சீறி வருமாறவுண னாவியுணு மானைமுக

தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்


சேருமழகார்பழநி வாழ்குமர னேபிரம

தேவர் வரதாமுருக ...... தம்பிரானே.

சேருமழகார்பழநி வாழ்குமர னேபிரம

தேவர் வரதாமுருக ...... தம்பிரானே.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow