மால்மருகா - எழில்
வேல்முருகா - நீயே
ஆவலுடன் உன்னைத்
தேடி வந்தேனே
மால்மருகா - எழில்
வேல்முருகா - நீயே
ஆவலுடன் உன்னைத்
தேடி வந்தேனே
முருகா வடிவேலா
தருவாய் அருள் குமரா
முருகா வடிவேலா
தருவாய் அருள் குமரா
நல்லூர் நாயகனே
நல்வழி காட்டும் ஐயா
நம்பிய பேர்களது
துன்பங்களைத் தீரும் ஐயா
நல்லூர் நாயகனே
நல்வழி காட்டும் ஐயா
நம்பிய பேர்களது
துன்பங்களைத் தீரும் ஐயா
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
நல்லூர் எம்பதியே
நம்பிக்கையின் ஒளியே
கதிர்மலைக் கந்தவேளே
காப்பது நீ ஐயா
கதியே நீயென்றால்
பதியே சரணம் ஐயா
கனிமலைக் கந்தவேளே
காப்பது நீ ஐயா
கதியே நீயென்றால்
பதியே சரணம் ஐயா
கந்தா கதிர்வேலா
வருவாய் சிவபாலா
கந்தா கதிர்வேலா
வருவாய் சிவபாலா
ஏழுமலை இடையினிலே
எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய்
ஆறுமுகா அழகேசா
ஏழுமலை இடையினிலே
எழுந்திடும் குமரேசா
ஆறுதலைத் தந்திடுவாய்
ஆறுமுகா அழகேசா
குமரா எழில் முருகா
குறுகுறு நகை அழகா
குமரா எழில் முருகா
குறுகுறு நகை அழகா
தோகைமயில் ஏறிவரும்
சேவல் கொடியழகா
பழமுதிர் சோலைகளில்
பவனி வரும் வடிவழகா
தோகைமயில் ஏறிவரும்
சேவல் கொடியழகா
பழமுதிர் சோலைகளில்
பவனி வரும் வடிவழகா
அரகர ஆறுமுகா
அருளே திருக்குமரா
அரகர ஆறுமுகா
அருளே திருக்குமரா
லண்டன் பாரிஸ் சுவிஸ்
ஜேர்மனி நோர்வே ஆஸி
கனடா வாழ்த் தமிழன்
நாயகனே முருகைய்யா
லண்டன் பாரிஸ் சுவிஸ்
ஜேர்மனி நோர்வே ஆஸி
கனடா வாழ்த் தமிழன்
நாயகனே முருகைய்யா
உலகாள் தமிழ்த் தலைவா
உமையாள் திருக் குமரா
உலகாள் தமிழ்த் தலைவா
உமையாள் திருக் குமரா
சிவனின் மைந்தன் ஐயா
சிங்கார வேலன் ஐயா
தகப்பனுக் குபதேசம்
செய்த சுவாமி நீ ஐயா
சிவனின் மைந்தன் ஐயா
சிங்கார வேலன் ஐயா
தகப்பனுக் குபதேசம்
செய்த சுவாமி நீ ஐயா
தவறுகள் பொறுத்திடுவாய்
தமிழரைக் காத்திடுவாய்
தவறுகள் பொறுத்திடுவாய்
தமிழரைக் காத்திடுவாய்
அரகர ஆறுமுகா
அருளே திருக்குமரா
