ஹர ஹர நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா..
தென்னாடுடைய சிவனே போற்றி!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
க்ருபா ஸமுத்ரம் ஸுமுகம் த்ரிநேத்ரம்
ஜடாதரம் பார்வதி வாம பாகம்
சதாசிவம் ருத்ரம் அனந்த ரூபம்
சிதம்பரேஸம் ஹ்ருதி பாவயாமி
ஓ சிதம்பர நாதரே தில்லை நடராஜரே
சிவகாமி நேசரே வா
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே
ஹோய் ஹோய் சிதம்பர வாசரே...
செங்கையில் மாமழு ஏந்தி
தனி சிறப்புடன் நடப்பது புதுமை (2)
நந்தி மத்தளம் கொட்ட
நாரதர் கீதம் பாட
தோம் தோம் என்ற நடனம் (2)
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே
ஹோய் ஹோய் சிதம்பர வாசரே...
பிட்டுக்கு மண் சுமந்த நேசரே
தடிப் பிரம்பால் அடி பட்ட வாசரே (2)
கட்டு கட்டாய் விறகுகளை
கடை தெருவில் விற்று வந்த
கால் தூக்கி நேசரே வா (2)
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே
ஹோய் ஹோய் சிதம்பர வாசரே...
சாம்பல் நிறம் பூசிகொண்டு நின்றீர்
சடை ஆண்டி வேஷம் போட்டுக்கொண்டு நின்றீர் (2)
சாம்ப சிவ சங்கரா என்று நாம்
பாடியே சதா பஜனை செய்வோம் (2)
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே
ஹோய் ஹோய் சிதம்பர வாசரே
தில்லை நடராஜரே
சிவகாமி நேசரே வா
உன் நடனத்தைக் காணவே
நாடி வந்தேன் சிவனே
நலம் பெற அருள்வாயே
ஹோய் ஹோய் சிதம்பர வாசரே...
தென்னாடுடைய சிவனே போற்றி!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
~~~*~~~
