04. லக்ஷ்மி வாராய் என் இல்லமே பாடல்வரிகள் - Lakshmi Vaaraai En Illame Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

04. லக்ஷ்மி வாராய் என் இல்லமே பாடல்வரிகள் - Lakshmi Vaaraai En Illame Lyrics

P Madhav Kumar

 லக்ஷ்மி வாராய் என் இல்லமே...

லக்ஷ்மி வாராய் என் இல்லமே

பாலாலி செல்வி வரலக்ஷ்மி

வாராய் என் இல்லமே

பாலாலி செல்வி வரலக்ஷ்மி

வாராய் என் இல்லமே


லக்ஷ்மி வா நான் வாழ்ந்திடும் வீடு

சூரியன் ஆயிரம் சுடர்முடியோடு

சூச்சுமமான பேறு பதினாறு

சுந்தரி தாராய் துளசியினோடு

லக்ஷ்மி வாராய் என் இல்லமே 

பாலாலி செல்வி வரலக்ஷ்மி 

வாராய் என் இல்லமே


குங்கும பச்சை கஸ்தூரி

எங்கும் கோரூர் ஜனமே தூவி

தங்க நிறத்தை கங்கணம் பூட்டி

மங்களைத் தாராய் மஞ்சளில் ஆசி

லக்ஷ்மி வாராய் என் இல்லமே 

பாலாலி செல்வி வரலக்ஷ்மி 

வாராய் என் இல்லமே


நறுமணம் சந்தனம் தாம்பூலம் 

ஆரத்தி தூபம் சாம்பிராணி 

திருமகளே உன் விருப்பம் யாவும் 

ஒரு மனதாக சமர்பித்தோம்

லக்ஷ்மி வாராய் என் இல்லமே 

பாலாலி செல்வி வரலக்ஷ்மி 

வாராய் என் இல்லமே

 

மஞ்சள் அக்ஷதை பரிமள கந்தம் 

பஞ்சவில் வதனம் பூரணகும்பம் 

செஞ்சுலக்ஷ்மி உன் ஆசைப்படி 

கொஞ்சமளித்தோம் பாதமடி

லக்ஷ்மி வாராய் என் இல்லமே 

பாலாலி செல்வி வரலக்ஷ்மி 

வாராய் என் இல்லமே


குண்டு மல்லிகை செவ்வரளி 

செண்டுடன் பாதிரி செண்பகமும் 

கண்டு பறித்து சந்ததமே

கொண்டு பூஜித்தோம் உன் பதமே

லக்ஷ்மி வாராய் என் இல்லமே 

பாலாலி செல்வி வரலக்ஷ்மி 

வாராய் என் இல்லமே 


ஆவணி மாத வளர்பிறையில் 

ஆவணி சுக்ர வாரமதில் 

தேவர்கள் போற்றும் ஸ்ரீதேவி 

சேவடி தொழுதோம் பூத்தூவி

லக்ஷ்மி வாராய் என் இல்லமே 

பாலாலி செல்வி வரலக்ஷ்மி 

வாராய் என் இல்லமே

~~~*~~~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow