07. அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே பாடல்வரிகள் - Ashtalakshmiyaga Vadivedutha Thayee Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

07. அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே பாடல்வரிகள் - Ashtalakshmiyaga Vadivedutha Thayee Lyrics

P Madhav Kumar

 | அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே

அஷ்ட ஐஸ்வர்யம் தந்திடுவாயே |2|

| அழகிய பாலகனை இடையில் வைத்த தாயே
அகிலம் தழைத்திட அருள்தருவாயே |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

| சந்தான பாக்கியம் தந்தருளும் தாயே
சகல உலகமும் உன்னால் தானே |2|

| மந்தார மலர்போலும் ஜொலிஜொலிக்கும் தாயே
மாநிலம் உந்தன் கைவண்ணம் தானே |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே


| ஓங்கார வடிவமான தலம்நிறைந்த தாயே
உலறிய சந்தானம் நீதானம்மா |2|

| ரீங்கார ஒலிமுழக்கம் கடலலையின் ஓரம்
ஆளுமை செய்பவளும் நீதானம்மா  |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

| ஜடையும் மகுடமும் அணிகின்ற தாயே
தடைகள் யாவையும் நீக்கிடுவாயே |2|

| சந்ததி காப்பவளும் நீதானே தாயே
சந்ததம் உன்னருளே தேவையம்மா |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

| அஷ்டலக்ஷ்மியாக வடிவெடுத்த தாயே
அஷ்ட ஐஸ்வர்யம் தந்திடுவாயே |2|

| அழகிய பாலகனை இடையில் வைத்த தாயே
அகிலம் தழைத்திட அருள்தருவாயே |2|

ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே


ஸ்ரீ லக்ஷ்மியே 
ஓம் லக்ஷ்மியே
சந்தானமே 
வா லக்ஷ்மியே

~~~*~~~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow