10. அண்ணாமலை என்னரசே பாடல்வரிகள் - Annamalai En Arase Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

10. அண்ணாமலை என்னரசே பாடல்வரிகள் - Annamalai En Arase Lyrics

P Madhav Kumar

 அண்ணாமலை என்னரசே...

உண்ணாமுலை பொன்னரசே...
தாயோடு நிற்பவரே...
தாய்பாதி ஆனவரே...

அருணாசல ஈஸ்வரனே...
ஆதி அந்தம் ஆனவனே...
வெண்பாவை மாணிக்கமே...
உன் ஜோதிஎன் எதிரே...

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...



ஞானம் பெறுவதும்சித்தம் நிறைவதும்,
அண்ணாமலையார் பாதமே....
சிந்தை ஒளிர்வதும்நெஞ்சம் நிறைவதும்,
ஐயன் அருளின் கீதமே...

பஞ்ச பருவபூஜை அனைத்தும்,
தஞ்சம் உனையே சேருமே..
பாதை எல்லாம்பரமன் நாமம்,
ஒலித்து ஒலித்து ஓதுமே...

அண்ணாமலை என்னரசே...
உண்ணாமுலை பொன்னரசே...
தாயோடு நிற்பவரே...
தாய்பாதி ஆனவரே...

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...



நமசிவாயமேநாவும் பாடவே,
நாளும் நிறைவாய் ஆகுதே...
ஈங்கை மலர்களும்வில்வ இலைகளும்,
ஈசன் முகமாய் தோன்றுதே...
சுயம்பு லிங்கமாய் மனதில் நின்ற,
அண்ணாமலையை பார்ப்பதே...
விந்தையின் வலிமைஎன்று தானே,
வாழ்வின் திறனை ஏற்றுதே...

ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...



கிருதா யுகத்தில்நெருப்புக் கோளமாய்,
ஆட்சி செய்த ஈசனே...
திரேதா யுகத்திலும்துவாபர யுகத்திலும்,
மாற்றம் பெற்றாய் உருவிலே...
அக்கினி லிங்கம்அழைக்கப்பெற்று
நீயும் கலந்தாய் உயிரிலே...
பார்க்கும் இடமெல்லாம்ஈசன் முகமே,
நமசிவாய வாழ்கவே....


அண்ணாமலை என்னரசே... (ஓம்..)
உண்ணாமுலை பொன்னரசே... (ஓம்..)
தாயோடு நிற்பவரே.. (ஓம்..)
தாய்பாதி ஆனவரே..(ஓம்..)

அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
உன் ஜோதிஎன் எதிரே... (ஓம் நமசிவாய)

அண்ணாமலை என்னரசே... (ஓம் நமசிவாய)
உண்ணாமுலை பொன்னரசே... (ஓம் நமசிவாய)
தாயோடு நிற்பவரே... (ஓம் நமசிவாய)
தாய்பாதி ஆனவரே... (ஓம் நமசிவாய)

அருணாசல ஈஸ்வரனே... (ஓம் நமசிவாய)
ஆதி அந்தம் ஆனவனே... (ஓம் நமசிவாய)
வெண்பாவை மாணிக்கமே... (ஓம் நமசிவாய)
உன் ஜோதிஎன் எதிரே... (ஓம் நமசிவாய)


~~~☆~~~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow