17. விந்தைகள் அருளும் திருமகளே பாடல்வரிகள் - Vindhaigal Arulum Thirumagale Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

17. விந்தைகள் அருளும் திருமகளே பாடல்வரிகள் - Vindhaigal Arulum Thirumagale Lyrics

P Madhav Kumar

 விந்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மியே திருமகளே

சத்திய ஞானம் நீதானே

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்


திருமகளே திருமகளே

கலைகளை அருளும் திருமகளே

வித்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே


பாரதி பார்கவி ஆனவளே

பராமக்ருபாகரி தூயவளே

நாரணி நான்மறை நாயகியே

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்


திருமகளே திருமகளே

கலைகளை அருளும் திருமகளே

வித்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே


ஆயக்கலைகளில் வாழ்பவளே

அறுபத்து நான்கில் தூய்பவளே

வேங்குழல் இசையில் எழுபவளே

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்


திருமகளே திருமகளே

கலைகளை அருளும் திருமகளே

வித்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே


எந்திர வடிவம் கொள்பவளே

இயலாய் இசையாய் இழைபவளே

எண்ணும் எழுத்தும் ஆனவளே

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்


திருமகளே திருமகளே

கலைகளை அருளும் திருமகளே

வித்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே


வடதிசை நோக்கிய வான்மகளே

மந்தஹாசமாய் மலர்பவளே

வலஇட மார்பினில் அமைபவளே

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்


திருமகளே திருமகளே

கலைகளை அருளும் திருமகளே

வித்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே


தெள்ளறிவாகிய தேவியனின் 

திரையிடும் துயரைத் தீர்ப்பவளே

உள்ளமதில் நீ வா மகளே 

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்

வித்யாலக்ஷ்மி நமஸ்காரம்


திருமகளே திருமகளே

கலைகளை அருளும் திருமகளே

வித்தைகள் அருளும் திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

வித்யாலக்ஷ்மி திருமகளே

~~~*~~~

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow