வேலேந்தினாலும் கோலேந்தினாலும்
வேடம் பல ஏந்தினாலும்
மயிலேறி வரும் முருகா
உன் கோலமோ என்றும் ஆனந்தம் . . . ஆனந்தம் . . .
சத்குருநாதா சண்முக தேவா
சிங்காரனே உன்னை பாடுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
தவமென்ன செய்தேன் பயனின்று கொண்டேன்
தண்டாயுதா உன்னை பாடவே
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
பைந்தமிழ் வேலா பார்வதி பாலா
பாடும் கதியென்று போற்றுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
நவயுகனே வரம் தந்தருள்வாயே
நாளும் உன்னை நான் போற்றவே
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
சிக்கலைத் தீர்த்திடும் சிக்கல் சிங்காரா
சிந்தையில் உன் முகம் ஏற்றுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
தக்கத் தருணத்தில் வந்தென்னை தாங்கும்
சக்தியின் வேலா போற்றுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
கதிர்காமதேவா எதிர்நோக்கும் நேசா
காலமெல்லாம் உன்னை பாடுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
விதிமாற்றும் வேலா குன்றக்குடி நாதா
மேன்மை தனை என்றும் சாற்றுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
மருதமலை வாழும் தெய்வமே உன்னை
மனதார நெஞ்சினில் போற்றுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
சுருளிமலை குகை சுந்தர முருகா
சுவையான புகழ் மாலை சூட்டுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
காவிரிக் கரையோர வயலூர் வேலா
காலமெல்லாம் நான் வாழ்த்துவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
வண்ணமயில் கூட்டம் சாமரம் வீசும்
விராலிமலையானே போற்றுவேன்
கந்தனே உன்னை பாடுவேன்
உன் கருணையை என்றும் நாடுவேன்
மங்களம் யாவும் பொங்கியே ஓங்கும்
மணிமுடியாரும் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
செங்கதிர் கோடி வந்தொளி மின்னும்
உந்தன் வதனங்கள் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
அன்பெனும் வெள்ளம் பாய்ந்திடும் உன்றன்
கண்களின் கோலம் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
ஆனந்தனே உந்தன் நீறு பூசிய
பிறைநுதழ் நெற்றியும் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
அண்ட பகிரண்டம் ஆட்டிப்படைக்கின்ற
அழகுக் கரங்களும் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
அழகுக் கரங்களில் பூமியைக் காத்திடும்
ஆயுதம் எல்லாம் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
ப்ரணவப் பொருள் சொல்லி பேரருள் செய்திட்ட
பவளச் செவ்வாயும் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
முருகா உன் நாமத்தைப் பாடிடப் பாடிட
எந்நாளும் தோன்றும் பேரானந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
தந்தன தந்தன என்றும் திருவடி
தந்திடும் நாட்டியம் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
தண்டை குலுங்க சதங்கை முழங்கிட
நின்றாடும் உன்பதம் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
வந்த வினைகளை வென்றிடும் உந்தன்
பங்கயத் தாள்களும் ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
பாடிடும் என்னையும் பாரினில் காத்திடும்
பரிவும் எல்லையில்லா ஆனந்தம்
கந்தனே நீயே ஆனந்தம்
உன் கருணையோ பரமானந்தம்
என்னுள்ளம் என்னங்கம் எங்கும் நிலைத்திடும்
எல்லாமே நீயிட்டக் கட்டளை தான்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
அன்பினை செய்கிறேன் செய்யச் சொல்லுகின்றாய்
அழகா உந்தன் புகழ் என்னவென்பேன்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
ஓங்காரமாம் உயர் நாதமலர் பூக்கும்
பூங்காவென உந்தன் ஆலயம்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
ரீங்காரமாய் உந்தன் நாமம் ஒலிக்கின்ற
இதயங்கள் உன் மயில் வாகனம்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
மண்ணாகி கல்லாகி மரமாகி பிறவாமல்
மனிதப் பிறவி வேணுமய்யா
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
மனிதன் நித்தமும் நின்திருக்கோலம்
கண்ணாரக் கண்டிட வேணுமய்யா
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
அறிவாறு தந்திட அதனாலே நான் வாழ
அவையாவும் வந்ததாக வேண்டுமய்யா
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
ஐங்கரன் தம்பியே என் ஐந்து புலனென்றும்
உன்னில் நிலைத்திட வேண்டுமய்யா
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
அல்லவையெல்லாம் தீர்த்திடுமே
சின்ன ஆறெழுத்துப் பெரும் மந்திரம்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
கொல்லிமலையானே நீமட்டுமல்ல
உன் அங்கங்கள் யாவுமே சுந்தரம்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
கங்கையின் மைந்தனே உன்னைப் பற்றிய பின்
என்றும் எனக்கில்லை சஞ்சலம்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
மங்கள மூர்த்தி சங்கரன் கீர்த்தி
பொங்கிடச் செய்வாய் மங்களம்
சரவணா பவ சண்முகா
சிவ சங்கரா குகா வேலவா
முருகனே போற்றி
கந்தனே போற்றி
வேலனே போற்றி
------