09. நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை ஐயப்பன் பாடல் வரிகள். Nalmuthu Maniyodu Oli Sinthum Maalai - K. Veeramani Ayyappa song Tamil Lyrics
December 27, 2024
நல் முத்து மணியோடு
ஒளி சிந்தும் மாலை
நவரத்ன ஒளியோடு
சுடர்விடும் மாலை
கற்பூர ஜோதியில் கலந்திடும் மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை
ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை
அய்யனின் கடைக்கண்ணில்
அன்பெனும் மாலை
அழுதையில் குளித்திடும்
அழகுமணி மாலை...
பம்பையில் பாலனின்
பவளமணி மாலை...
ஐந்து மலை வாசனின்
அழகுமணி மாலை ஐயப்ப சுவாமியின்
அருள் கொஞ்சும் மாலை
ஆனந்த ரூபனின் அன்பென்னும் மாலை
கன்னியின் கழுத்தினில்
அரங்கேறும் மாலை
முத்தோடும் மணியோடும்
முழங்கிடும் மாலை
முக்கண்ணன் மகனான
மணிகண்டன் மாலை -- கழுத்தோடு உறவாடும்
காந்தமலை மாலை ..
காணவரும் பக்தர்க்கு
காட்சிதரும் மாலை
Tags