Perumal Bhakthi Padal Lyrics
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2) ஓம் நமோ நமோ
சகலலோக சாக்ஷியாகி சகல வேதசாரமாகி
சகலலோக சித்தியாகி நின்ற மூர்த்தியே
சகல தத்து வங்களாகி பரம ஞான வித்தையாகி
சகல சப்த வடிவமாகி வந்த மூர்த்தியே வந்த மூர்த்தியே
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2) ஓம் நமோ நமோ
அகுண சகுண நிலையிலாகி அசரசர விபாகமாகி
அதிலுமாகி இதிலுமாகி அமைந்த மூர்த்தியே
அணுவுளே அகண்டமாட அணுவினால் அனைத்துமாட
அமரநாத வடிவிலாடும் அருண மூர்த்தியே அருண மூர்த்தியே
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2) ஓம் நமோ நமோ
எனது நான் எனச் செருக்கும் மமதை உற்றலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
எனதுள்ளத்தில் உனது நாமம் எழுதிவைத்து நடனமாடி
ஏகமாய் எனில் கலந்த யோக மூர்த்தியே யோக மூர்த்தியே
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2) ஓம் நமோ நமோ
படியெல்லாம் கடந்த சுத்த ப்ரம்ம வஸ்துவாய் இருந்தும்
பஜனையால் மகிழ்ந்து தோன்றும் திவ்ய மூர்த்தியே
ஒரு கணத்துள் எனதுளத்தை உருகவைத்த உனது நாமம்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ ஓம் நமோ நமோ
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2) ஓம் நமோ நமோ
அளவில்லாமல் எழும் விசாரம் அனைத்தையும் மறுள் அகற்றி
அமைதி பெற்றடங்க வைத்த அன்பு மூர்த்தியே
ஒரு கணத்துள் எனதுளத்தை உருக வைத்து உனது நாமம்
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ ஓம் நமோ நமோ
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2) ஓம் நமோ நமோ
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நமோ (2)
ஓம் நமோ நமோ