27. இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா பாடல் வரிகள் - Irumudiyai Sumanthu Vanthen Irakkamilaiya Lyrics- Parasu Kalyan Version

P Madhav Kumar
0 minute read

 இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..ஐயப்பா

இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..ஐயப்பா

இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

அழுகையிலே குளித்து வந்தேன் அறியவில்லையா -நான்

அருகே ஓர் காலயெடுத்து வைக்கவில்லையா

காரிமலையில் எறிவந்தேன் கவனமில்லையா -அந்த 

கருடன் என்னை கண்டதாக சொல்லவில்லையா

இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..ஐயப்பா

இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

பம்பையிலே குளித்து வந்தேன் பார்க்கவில்லையா ஐயப்பா

பம்பாநதி போஜனம் நீ அருந்தவில்லையா

பம்பையிலே விளக்கேடுத்தேன் காணவில்லையா

பகவானே உனக்கு கூட சாட்சி தேவையா

இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..ஐயப்பா

இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

பதினெட்டு படிகள் ஏறி வரவுமில்லையா-நான்

படிதேங்காய் உடைத்த சதம் கேட்கவில்லையா

கொடிமரத்தை சுற்றி வந்தேன் காணவில்லையா

கூடி நின்ற ஜனங்களை போய் கேட்டு பாரையா

இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..ஐயப்பா

இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

நெய் அபிசேஷகம் செய்தேன் நினைவுமில்லையா-நான்

மேய்யுறுக பாடியதும் கேட்கவில்லையா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லையா நீ

விஸ்வமெல்லாம் காத்‌தருளும் ஜோதியல்லவா

இருமுடியை சுமந்து வந்தேன் இறக்கமில்லையா..ஐயப்பா

இறைவா உன் சோதனைக்கோர் அளவுமில்லையா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat