34. எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான் Lyrics -Enthan Thaayanavan Nenjil

P Madhav Kumar
1 minute read

 எந்தன் தாயானவன் நெஞ்சில் 

சேயாகித் துயில்கின்றான்

தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய் 
தினம் பாடத்தான்


கருணைக் கடலானவன் நெஞ்சில்
அலையாகித் தவழ்கின்றான் 
தாலாட்டை நான் பாடத்தான்

சரணத்தை நான் தாலாட்டாய் 
தினம் பாடத்தான்


என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு
பக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு
எந்தன் தாயானவன் நெஞ்சில்
சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்

காற்றாட‌ கொடியாட‌ வனம் ஆடுமே
சபரி வனம் ஆடுமே
ஐயன் கண் வசத்தாலேதால்
கடல் ஏழுஸ்வரம் ஏழுபிறப்பேழுதான்
உலகில் பிறப்பேழுதான்
இதில் நீ இன்றாய் இடம் ஏதுதான்
என் கண் தந்த‌ நீயே அதில் ஒளியாகிறாய்
என் குரல் தந்த‌ நீயே அதில் ஒலியாகிறாய்
உடல் தந்து உயிர் ஆகிறாய் … ஆ..அஆ... 

எந்தன் தாயானவன் நெஞ்சில்
சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்

பருவங்கள் மாற‌ உடல் உருமாறுமே
உள்ளம் அய்யன் அவன் நினைவாகுமே என்றும்
சரணங்கள் சொல்ல‌ ஒரு நிலையாகுமே
மனச் சலனங்கள் கலைந்தோடுமே
உன்னை அபிஷேகம் செய்யத்தான்
பாலைக் கொணர்ந்தேன்
உன்னை அல‌ங்காரம் செய்யத்தான்
மாலைக் கொணர்ந்தேன்
உன்னை சேவிக்க‌ 
என்னைக் கொனர்ந்தேன் … ஆ..அஆ... 

எந்தன் தாயானவன் நெஞ்சில்
சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய்
தினம் பாடத்தான்


கருணைக் கடலானவன் நெஞ்சில்
அலையாகித் தவழ்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய்
தினம் பாடத்தான்
என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு
பக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு


எந்தன் தாயானவன் நெஞ்சில்
சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய்
தினம் பாடத்தான்

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat