அரிஹ்ர புத்ரனை, ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை ஆறுமுகன் தம்பியை
சபரிகிரிசினை, சாந்த சொருபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோமே.
ஐயப்ப தேவன் கவசமிதனை
அனுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வரும்.
நூல்
மண்ணுலக கெல்லாம் காத்தருள் செய்ய
மணிக்ண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக. 1
புலி வாகனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணிய மூர்த்தியே வருக வருக. 2
பூத நாயகா வருக வருக
புஷ்கலை பதியே வருக வருக
பொன்னம்பலத்துறை ஈசா வருக வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக. 3
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக. 4
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகன்றிட அனொஅனே வருக
இருவினை களைந்தே எணயாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக. 5
பதிணென் படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப் பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களூம் அடி பணிந்திடுமே. 6
சபரிகிரீசனை நினைத்தே நீறிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே. 7
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்
ஐயப்பன் பாதம் அனுதினம் நினைக்க
அவனியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர் 8
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சற்குருநாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம். 9
வேண்டுதல்
சிவனார் மகன் சிரசினை காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணினைக் காக்க
நாரணன் பாலன்நாசியைக் காக்க. 10
இருமூர்த்தி மைந்தன்என் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
ப்ம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜியன் நாவினைக் காக்க. 11
கலியுக வரதன்என் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பிஎன் குரலவளைக் காக்க
புஷ்கலை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க. 12
வீரமணிகண்டன் விரல்களைக் காக்க
கடிலை மைந்தன் கைகளைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க. 13
முழுமுதற் கடவுள்என் முதுகினைக் காக்க
இருமுடிப் பிரியன்என் இடுப்பினைக் காக்க
பிரம்மாயுதன்என் பிட்டங்கள் காக்க
தர்மசாஸ்தா துடைதனைக் காக்க. 14
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதிஎன் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜய குமாரன் விரல்களைக் காக்க. 15
அன்னதானப் புரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்காவு ஜோதி அன்புடன் காக்க
காட்டாளருபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க. 16
மாலின் மகனார் அனுதினம் காக்க
அரிகர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க. 17
அரியின் மகனார் அனுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இட்ப்புறம் காக்க. 18
காக்க காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க என் பாவம் பொடிபட
இமையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க. 19
கொடிய விஷங்களும் கொள்ளை நோய்களும்
குருதியைக் குட்டிக்கும் திஷ்டப் பேய்களும்
சாந்தமலை தனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய். 20
பில்லி சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய். 21
வாதம், பித்தம், சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும், வலிப்பும், சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணு காமல்
என்றுமே காப்பாய் எடுமேலி தேவா 22
கல்வியும் செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா. 23
காமம், குரோதம், லோபம் மோகம்
மதமாச்சர்ய மெனும் ஜம்பெரும் பேய்கள்
என்றுமே என்னை அணுகி விடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய் 24
சூது, பொறாமை, பொய், கோபமில்லாமல்
சோரம், லோபம், தின்மார்க்கம் இல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய். 25
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தெனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன் திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே. 26
நம்ஸ்காரம்
அரிகரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ 27
பொன்னம்பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
சுரிகா யுத்முடைச சுந்த்ரா நமோ நமோ
மஹிஷி மாத்தனா மணிகண்டா நமோ நமோ 28
சரணம் சரணம் சபரி கிரிசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம் 29
சுவாமியே சரணம் ஐயப்பா