36. ஐயப்பன் பஞ்சரத்ன மாலை பாடல்வரிகள் - Ayyappan Pancharatna Malai Lyrics

P Madhav Kumar
1 minute read

 அத்வைத வஸ்துவாய் ஆதி பரமாத்மனாய்

அசலனாய் அகுண குணணாய்
அமரருக்கதிபனாய் அடியவர்க்கெளியனாய்
சுத்த ஸத்துவ பரப்ரஹ்ம சாட்சாத்கார
லீலா வைபவங்கள் பல என்று மறை
சொல்லுகின்றதேதுமறியேன்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஜோதியாய் தோன்றும் உந்தன் துரிய
பித்தனாய் நினது புகழ் பேசித் திரிந்து நின்
பெருமையை நினைத்து பாடிப் பிதற்றுகின்றேன்
பிழை பொறுத்தாள வருவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தத்துவமனைத்தும் ஒரு முத்திரை உரைத்திட
தந்த சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே


🌺  🌺
அந்தகாரத்திலே அருள் விளக்கேந்துவாய்
அடவியிலே வழி காட்டுவாய்
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
அரவு பலி மிருகங்கள் அலகை பேய் குறள்
கள்வர் அணுகாது காத்து வருவாய்
வந்தனை புரிந்து மனமலரிட்டு வாழ்த்துவோர்
மரபெல்லாம் ஓங்க வைப்பாய்
மாறாத நோய்க்கொரு மருந்தாகி மாற்றுவாய்
மரணபயமும் போக்குவாய்
இவ்விதம் நீ புரியும் எண்ணிலா விளையாடல்
எண்ணித் துதிக்க வசமோ ஏறாத மலையேறி
எய்தும் மெய்யடியவரை ஏற்பதுன் பாரமல்லவோ
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
சந்தண சுகந்த சுந்தர சுதந்திர சித்த சங்க சற்குருநாதனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே


🌺  🌺  🌺  
ஏந்து புகழ்சூழ்ந்த கனகாந்தகிரி ஓங்கி எழும்
ஏகாந்த ஜோதிமணியே
எண்ணுவோர் எண்ணியதெல்லாம்
பேரின்ப மழை பொழியும் முகிலே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
நீந்தரிய பிறவிப் பெருங்கடல் கடத்தி
அருள்நிலை சேர்க்க வந்த துணையே
நெடும் பாலைவன வாழ்வில் நின்ற கற்பகமே
நிராலம்பமான மெய்ப்பொருளே
மாந்தளிர் மடந்தையர் மருங்குற மகிழ்ந்தெம்மை
வாழ்விக்கும் கருணை வடிவே
வர நீல சேல சிங்கார சுகுமார
மதிவதனனே மணிகண்டனே
சாந்த சமரச சச்சிதானந்த சன்னதியில்
சரணமே சரணம் அருள்வாய்
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே


🌺  🌺  🌺  🌺  
நீயலாதென் குறைகள் கேட்பவருமில்லை ஒரு
நிழலில்லை என்று மனமோ நிலையில்லை
நினை அடையும் நியமங்களில்லை
நின் நினைப்பன்றி ஒன்றுமில்லை
ஆயிரம் பிழைகள் தனதடியவர் புரிந்தாலும்
ஆதரித்தருளும் அரசே அவதார மூர்த்தயே
அன்பான தெய்வமே ஆதி அய்யப்ப குருவேதூயனே பம்பைத் துறைவனே சிவஞான ஜோதியே
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஈன்றவர் உன்னைத் தொட்டனைத்துய்ய நீ
யார் போன்றுளாயென சொல்லாது
தாயவள் மடித்தலம் இருந்து முத்திரை ஒன்று
தந்தை போல் வைத்த மகனே
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே


🌺  🌺  🌺  🌺  🌺
அரியமறை புகழ்கின்ற அன்னதானம் செய்யும்
அருளாளர் வாழ்க வாழ்க
அனுதினமும் நின் கோவில் இலகு திசை
தொழுகின்ற அனைவரும் மகிழ்ந்து வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
விரத நியமங்களால் மெய் மறந்துனது பெயர்
விண்ணதிரவே முழங்கி வெற்பேறி வளர்படிகள்
மேலேறி வருகின்ற மெய்த் தொண்டர் வாழ்க
ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
தெரிய விளையாடி அற்புத சித்து காட்டும் உன்
திருநாம மகிமை வாழ்க
தேடும் இக்கவிமாலை பாடுவோர் இன்பச்
சிறப்பெல்லாம் ஓங்கி வாழ்க
சரியை கிரியா யோக ஞான சன்னதி
சரணம் சரணமே சரணம் ஐயா
சதமதன பிரகாச கலசமுனி விசுவாச
சபரிமாமலை வாசனே

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat