சூரிய சந்திரனின் கண்ணழகோடு
அரிமா தேவனின் மெய்யழகோடு
சங்கு கழுத்திலோ பொன்மணியோடு
பஞ்குனி மாதத்தில் உத்திர நாளில்
பஞ்சமி திதியில் பிறந்தானய்யன்
சூரிய சந்திரனின் கண்ணழகோடு
அரிமா தேவனின் மெய்யழகோடு
சங்கு கழுத்திலோ பொன்மணியோடு
பஞ்குனி மாதத்தில் உத்திர நாளில்
பஞ்சமி திதியில் பிறந்தானய்யன்
எங்கெல்லாம் சென்றவன் வந்தான் - ஐயன்
என்னென்ன கோலம் எடுத்தான்
பாதிரத்தின் மலையில் கருங்காடு கலக்கி
பாண்டிக் கரிமலையில் வேட்டையாடினான் - அரசன்
பம்பை நதிக் கரையோரத்திலே குழந்தை
மணிகண்டனைக் கண்டெடுத்தான்
கண்மணியாய் அரண்மனையில் வளர்ந்தான் ஐயன்
குழந்தை இளவரசாய் பந்தளத்தில் வாழ்ந்தான் ஐயன்
அரண்மனையில் வளர்ந்தான் ஐயன்
பேர் பெற்ற பந்தளத்திளவரசன் - அன்று
காட்டுக்குப் போனது ஏனய்யா
புலிப்பால் பெறப் போனதும் வந்ததும் எப்படி ஐயா
காடேறிப் போகையில் யைனின் முன்பும் பின்பும்
ஆயிரம் பூதத் திருக்கூட்டம்
மங்கை மகிஷியைக் கொன்று திரும்பும்போது
ஆயிரம் தேவர்கள் அப்புறமும் இப்புறமும்
உலகோரும் மேலோரும் மகிழ்ந்தாட யைன்
சபரிமலையிலே எழுந்தருளி கோயில் கொண்டு
அப்பன் அருள் கொடுப்பான்