49. தள்ளாடி தள்ளாடி நடை நடந்து பாடல்வரிகள் - Thalladi Thalladi Nadai Nadanthu Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

49. தள்ளாடி தள்ளாடி நடை நடந்து பாடல்வரிகள் - Thalladi Thalladi Nadai Nadanthu Lyrics

P Madhav Kumar

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு
சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா
சாமி... 

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா
 
இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு 
 
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
வேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திம்தக்க‌ தோம் தோம்ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
சாமி திம்தக்க‌ தோம் தோம்ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு 
வேடிக்கையாய்நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு 
 
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு
 
தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு 

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா 

படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு
படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு
நெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு
ஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா

சாமியே,.... சரணம் ஐயப்போ....
சாமியே...... சரணம் ஐயப்போ ....
சாமியே...... சரணம் ஐயப்போ ....

சாமி சரணம் ஐயப்ப‌ சரணம் 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow