51. துளசிமணி மாலை கட்டி இருமுடியைத் தலையில் ஏந்தி Tulasi Mani Maalai katti

P Madhav Kumar
0 minute read


துளசிமணி மாலை கட்டி
இருமுடியைத் தலையில் ஏந்தி

சபரி நோக்கி நடையைப்

போடு கன்னிச்சாமி - அங்கே



சாஸ்தாவின் அருள்

கிடைக்கும் கன்னிச்சாமி

எரிமேலிப் பேட்டையிலே

கரிமலையில் நடக்கையிலே



எத்தனையோ இன்பமுண்டு

கன்னிச்சாமி - நீயும்

வந்து பார்த்து வார்த்தைக்

கேளு கன்னிச்சாமி



துளசிமணி மாலை கட்டி
இருமுடியைத் தலையில் ஏந்தி

சபரி நோக்கி நடையைப்

போடு கன்னிச்சாமி



பாட்டுப்பாடி பஜனைப்பாடி

பம்பாநதி தீர்த்தமாடி

காட்டுக்குள்ளே குடியிருப்போம்

கன்னிச்சாமி - அதிர்



வேட்டு வச்சு

வழிநடப்போம் கன்னிச்சாமி

மலையதிரச் சரணம் போட்டு

மனமுருகப் பாட்டும் கேட்டு



அலையலையாய் நடந்து

வந்தோம் கன்னிச்சாமி - அங்கே

ஆனந்த தரிசனம்

காண்போம் கன்னிச்சாமி


துளசிமணி மாலை கட்டி
இருமுடியைத் தலையில் ஏந்தி

சபரி நோக்கி நடையைப்

போடு கன்னிச்சாமி

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat