53. நல் முத்து மணியோடு ஒளி சிந்தும் மாலை - Nalmuth Maniyodu Oli Sinthum Malai Lyrics

P Madhav Kumar
0 minute read

 நல் முத்து மணியோடு

ஒளி சிந்தும் மாலை
நவரத்ன‌ ஒளியோடு
சுடர்விடும் மாலை

கற்பூர‌ ஜோதியில் கலந்திடும் மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை
கனகமணி கண்டனின் துளசி மாலை

ஆயிரம் சரணங்கள் சொல்லிடும் மாலை
அய்யனின் கடைக்கண்ணில்
அன்பெனும் மாலை
அழுதையில் குளித்திடும்
அழகுமணி மாலை
பம்பையில் பாலனின்
பவள‌மணி மாலை

ஐந்து மலை வாசனின்
அழகுமணி மாலை ஐயப்ப‌ சுவாமியின்
அருள் கொஞ்சும் மாலை
ஆனந்த‌ ரூபனின் அன்பென்னும் மாலை


கன்னியின் கழுத்தினில்
அரங்கேறும் மாலை
முத்தோடும் மணியோடும்
முழங்கிடும் மாலை
முக்கண்ணன் மகனான‌
மணிகண்டன் மாலை -- கழுத்தோடு உறவாடும்
காந்தமலை மாலை ..
காண‌வரும் பக்தர்க்கு
காட்சிதரும் மாலை

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat