55. நிலாவின் ஒளி வீசும் உன் ஆடை நீலவானமய்யா - Nilaavin Oli Veesum Lyrics
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

55. நிலாவின் ஒளி வீசும் உன் ஆடை நீலவானமய்யா - Nilaavin Oli Veesum Lyrics

P Madhav Kumar

 நிலாவின் ஒளி வீசும் உன் ஆடை நீலவானமய்யா

உலகில் அனைவரையும் ஒன்றாக்கும் உனது நாமமய்யா

சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா மலைகள் ஏறி வந்தோம் என் ஐயனே மனம் இரங்காயோ அலையும் மனதினிலே எனக்கு நீ - அமைதி தாராயோ

சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா

நியமம் ஒன்றறியேன் - நின்னடியார் நிழலில் நின்றறியேன் கயவன் நானெனினும் எனக்கு நீ கருணை செய்திவாயோ  

சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா

மீண்டும் இந்திரனை - விண்ணவரின் வேந்தனாக்கி வைத்தாய் வேண்டும் பொழுதெல்லாம் வில்லுடனே தோன்றி வரம் தருவாய்

சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா மதுரமதி வதனா என் ஐயனே மதன மோகனனே வணங்கும் குறு முனிவன் - தன் மொழியால் மகிழும் மணிகண்டா

சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா

சபரிகிரிநாதா என் ஐயனே சரணம் சரணமய்யா ஸ்ரீ தர்ம சாஸ்தாவே என் ஐயனே சரணம் சரணமய்யா

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow