பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன்
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன்
காத்துப்பட்ட கற்பூரம் போலே
உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
சேர்த்து வச்ச வார்த்தையை தொலைச்சேன் - நான்
பேச்சிருந்தும் தவியா தவிச்சேன்
நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
மனசும் கரைஞ்சி போச்சி
நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
மனசும் கரைஞ்சி போச்சி
பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும்
அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த
காட்டுக்குள்ளே குழந்தை
நீ எப்படி இங்கே இருந்த - எனை
கூட்டி வந்து நடை தொறந்து
குறு குறுன்னு சிரிச்சே
உன் சிரிப்பை பார்த்து சிந்தை சிதறி போச்சு
அது படியில் ஓடைச்ச சிதறு தேங்காய் ஆச்சு
என் நாக்கை சுழட்டி சுழட்டி நல்ல சரணம் போட மறந்தேன்
அந்த மேற்கு வானம் போல
இங்கே அழுது சிவந்து கிடந்தேன்
பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன
பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன்
கட்டு சுமந்த பிறகு இந்த கட்டை புனிதமாச்சு
ஒன்ன கண்டு பிடிச்ச ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு
மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சி போச்சு
நாற்பது நாள் ஒழைச்சதுக்கே கடவுளோட பேச்சு
ஒரு மந்திரத்தில் மாங்கா கிடைச்ச கதையா
நான் கேட்ட உடன் கிடைச்சிட்டியே ஐயா
அந்த பம்பை ஆத்து மீனா உன் பாதம் கிடப்பேனா
என்னை போகச்சொல்லி சொன்னா நான் சும்மா போயிடுவேனா
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
ஒன்ன பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
காத்துப்பட்ட கற்பூரம் போலே
உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
மனசும் கரைஞ்சி போச்சி
நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
மனசும் கரைஞ்சி போச்சி
பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன
ஒன்ன பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
பார்த்து பார்த்து பரவசமானேன்