மகரத்தின் மணிவிளக்கு
மணிகண்டன் அருள் விளக்கு
இறைவனின் திருவிளக்கு
எந்நாளும் துணை நமக்கு
மகரத்தின் மணிவிளக்கு
மணிகண்டன் அருள் விளக்கு
அமைதியின் ஒளிவிளக்கு
ஐயப்பனே குலவிளக்கு
சபரிமலை விளக்கு.... விளக்கு
நல்வாழ்வின் வழி நமக்கு
மகரத்தின் மணிவிளக்கு
மணிகண்டன் அருள் விளக்கு
தலைவனின் சுடர் விளக்கு
தைமாதத் தனி விளக்கு
ஆண்டுக்கு ஒரு விளக்கு அதைக்
காணும் பணி நமக்கு
மகரத்தின் மணிவிளக்கு
மணிகண்டன் அருள் விளக்கு
நெய்யால் திகழ் விளக்கு
நினைத்ததெல்லாம் தரும் விளக்கு
தெய்வத்தவ விளக்கு
திருக்காட்சி உயிர் நமக்கு
மகரத்தின் மணிவிளக்கு
மணிகண்டன் அருள் விளக்கு
இறைவனின் திருவிளக்கு
எந்நாளும் துணை நமக்கு
மகரத்தின் மணிவிளக்கு
மணிகண்டன் அருள் விளக்கு