65. மலை மீது மணியோசை ஐயப்பா பாடல் வரிகள் - Malai Meethu Mani Osai Ayyappa Lyrics

P Madhav Kumar
1 minute read

 மலை மீது மணியோசை ஐயப்பா

மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா

மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா

அலை தானோ தலை தானோ ஐயப்பா(x2)
அடியார்க்கு அருள் கோடி செய்யப்பா

மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா

தொடங்கிடும் பேட்டையில் புது எண்ணமே
தொடர்கின்ற‌ மனமெங்கும் உன் வன்ணமே
திருப்பேரூர் தோடென்னும் ஆற்றிலே - கால்
நடைபோட்டுப் பொரி போடும் கூட்டமே
அழுதையில் நீராடி செல்கின்றவ‌ர்
அழுதேற்றம் மலைமீது கல் கொண்டவர்
கல்லிடும் குன்றத்தில் இடுகின்றவர்
கரிமலை அருள் தன்னை கான்கின்றவர்

மலை மீது மணியோசை ஐயப்பா
மழை போல‌ ஜனவெள்ளம் ஐயப்பா

பம்பையில் ஆடியும் தீபம் நகர்த்தியும்
பக்தி கொண்டாடிடுவார் திருப்பரம்
பொருள் கணபதி தன்னை வனங்கி
பக்தியில் பொங்கிடுவார்

நீலி மலை தனிலேறி நடந்து
சபரியை நெருங்கிடுவார் அங்கே
நிலைபெறும் பீடம் சபரியைக் கண்டு
சரங்குத்தி வண‌ங்கிடுவார்

பதினெட்டு படியினில் பூஜை நடத்தும்
பக்தர்கள் ஒரு கோடி அவர் பரவசமானார்
தம்மை மற‌ந்தார் ஐயா உனை நாடி

அருட்பெருஞ்சோதி மிகப் பெரும் கருணை
ஆனந்த‌ ஒளி வீசும், தினம் அங்கே எரியும்
சோதியைக் கண்டால் ஆதவன் திருக்கோலம்

சாமியே சரணம், சரணம் பொன்னய்யப்பா,சரணம் ஐயப்பா (x9)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat