பச்சை மயில் வாகனனே
பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்பிரமண்யனே வா - இங்கு
பச்சை..
இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன் எள்ளளவும் ஐயம் இல்லையே - ஓம் முருகா
கொச்சை மொழியானாலும் உன்னை
கொஞ்சிச் கொஞ்சி பாடிடுவேன் - முருகா
சச்சையெல்லாம் மறைந்நதப்பா இங்கு
பச்சை..
சாந்தம் நிறைந்ததப்பா நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு
நேர்மை யென்னும் தீபம் வைத்தேன்
நீ நீ செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா - முருகா
சேவற் கொடி மயில்வீரா
பச்சை..
வெள்ளமது பள்ளம் தனிலே பாயும் தன்மை போல் உள்ளந்தனிலே - நீ உ
மெல்ல மெல்ல புக்ந்துவிட்டாய் - எந்தன்
கள்ளமெல்லாம் மறைந்ததப்பா ஆறுபடை வீடுடையவா
பச்சை..
எனக் காறுதலைத் தரும் தேவா - நீ ஏறுமயில் ஏறிவருவாய் முருகா
எங்கும் நிறைந்தவனே அலைகடல் ஓரத்திலே
பச்சை..
என் அன்பான சண்முகனே
நீ அலையா மனம் தந்தாய் உனக்கு அனந்த கோடி நமஸ்காரம்.
பச்சை..