வேண்டுதல்

P Madhav Kumar

 வேண்டுதல்


ஆற்றல்கள் அனைத்தும் நீயே, அருளுவாய் எனக்கும் ஆற்றல் போற்றிடும் வீரியம் நீ, எனக்கதைப் புகட்ட வேணும்; மாற்றரும் பலங்கள் நீயே, மற்றெனைப் பலவா னாக்கு; சாற்றரும் ஜீவ சத்தே, சத்தினை எனக்குத் தாராய். தீமையை வெறுத்து நீக்கும், தீரமாய்த் திகழ்வாய் நீயே; வாய்மையில் எனக்கும் அந்த, வலிமையை வழங்க வேண்டும்; தாய்மையின் சகிப்பு நீயே, தந்தருள் சகிப்புத் தன்மை; தூய்மைசேர் ஒழுக்க வாழ்வில், துலங்கிடும் ஆன்ம ஜோதி. உடலினும் உயிருக் கப்பால், உயர்ந் தொளிர் ஆன்ம சக்தி, கடலினும் பெரிதாம் உன்தன், கருணையின் மூழ்கச் செய்வாய்; அடைவரும் அமைதி தந்து, அன்பெனும் அமுத மூட்டி! மடமைகள் யாவும் மாற்றி, மங்களம் அருள்வாய் போற்றி.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat