Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

திருச்செந்தூர் முருகன்

 திருச்செந்தூர் முருகன்


திருச் செந்தூரின் கடலோரத்தில்


செந்தில்நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம்


தினமும் கூடும் தெய்வாம்சம்


அசுரரை வென்ற இடம்


அது தேவரைக் காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும்


அன்பர் திருநாள் காணுமிடம்


கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்


தலையா கடன் அலையா


குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்


குமரனவன் கலையா


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கும் முகம் ஒன்று சாதி மத பேதமின்றி பார்க்கும் முகம் ஒன்று நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ணமுகம் ஒன்று நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு.

📢 Follow