புல்லாங்குழல்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் வண்டாடும் கங்கைமலர் தோட்டங்களே பன்னீர் மலர்ச்சொரியும் மேகங்களே எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன் தென் கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் திருவெங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் பாஞ்சாலி புகழ்காக்கா தன் கை கொடுத்தான் அந்தப் பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான் நாம் படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான் புல்லாங்குழல்..
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல்...
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன் புல்லாங்குழல்..
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
புல்லாங்குழல்..